அந்த நாட்டில் மட்டும் மக்கள் 100 வயது வரை வாழ்கிறார்கள் - ரகசியம் இதுதான்!
ஜப்பானியர்கள் பின்பற்றும் வாழ்க்கை முறை பற்றி காணலாம்.
நீண்ட ஆயுள்
கிரீன் டீ ஜப்பானிய கலாச்சாரத்தில் முதன்மையான பானமாக பயன்படுத்தப்படுகிறது. மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி, நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான அபாயங்களை குறைக்கிறது.
தினமும் நடைபயிற்சிக்கு செல்வது, யோகா பயிற்சி செய்வது போன்றவற்றை உங்களது அன்றாட வழக்கத்தில் பின்பற்றுவதன் வாயிலாக உங்களுடைய இதய ஆரோக்கியம் மேம்படும்.
நீங்கள் சாப்பிடக்கூடிய ஒவ்வொரு வாய் உணவையும் கவனமாக நன்கு மென்று கூழாக்கி விழுங்க வேண்டும். இவ்வாறு சாப்பிடுவது அதிகப்படியாக சாப்பிடுவதை தவிர்த்து, உடல் எடை அதிகரிப்பதை தடுக்கிறது. உணவில் கடல் சார்ந்த உணவுகள் வழக்கமாக இருப்பதை உறுதி செய்யுங்கள்.
அன்றாட வழக்கம்
புளிக்க வைக்கப்பட்ட உணவுகள் ஜப்பானிய டயட்டின் முக்கிய அம்சமாக அமைகிறது. எனவே இட்லி, தயிர், ஊறுகாய் போன்ற புளிக்க வைக்கப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்கள்.
பச்சை நிற கீரைகள், ஆரஞ்சு நிற கேரட்டுகள், பெர்ரி பழங்கள் போன்ற பல்வேறு நிறங்கள் அடங்கிய காய்கறிகள் மற்றும் பழங்களை தினமும் சாப்பிடுங்கள்.
இதனால் நீங்கள் நீண்ட ஆயுளை பெறலாம்.