பாலியல் சீண்டல்: உருக்கத்தில் ஜப்பான் பெண் - நெட்டிசன்கள் கலக்கம்

Holi Viral Video Delhi Crime
By Sumathi Mar 12, 2023 07:21 AM GMT
Report

ஜப்பான் பெண்ணிடம் இளைஞர்கள் சிலர் அத்துமீறிய சம்பவம் கண்டத்திற்குள்ளாகியது.

அத்துமீறல்

டெல்­லி­யில் பகர்­கஞ்ச் பகு­தி­யில் உள்­ளூர்­வா­சி­களும் வெளி­நாடுகளைச் சேர்ந்த சுற்­றுலாப் பயணி­களும் சேர்ந்து ஹோலி கொண்­டாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். அப்­போது, ஜப்­பானைச் சேர்ந்த இளம் பெண்­ணி­டம் சில இளை­யர்­கள் பாலி­யல் ரீதி­யில் அத்­து­மீ­ற­லில் ஈடு­பட்­ட­ வீடியோ வெளியாகி வைரலானது.

பாலியல் சீண்டல்: உருக்கத்தில் ஜப்பான் பெண் - நெட்டிசன்கள் கலக்கம் | Japan Woman Faced Harassment Holi Festival Delhi

அதனைத் தொடர்ந்து 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், ஹோலி பண்டிகையில் நடந்த சம்பவத்தை எனது நண்பர்கள் வீடியோ எடுத்தனர்.

இளம்பெண் உருக்கம்

அந்த வீடியோவை நான் தான் சமூக வலைதளங்களில் பதிவிட்டேன். ஆனால், அந்த வீடியோ வைரலாகியதும் அதை நான் நீக்கிவிட்டேன். இந்த வீடியோவால் பாதிக்கப்பட்டவர்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இந்தியாவில் உள்ள அனைத்து விஷயங்களையும் நாங்கள் நேசிக்கிறோம்.

இந்தியாவையும் நேசிக்கிறோம். நான் பல முறை இந்தியாவுக்கு வந்திருக்கிறேன். இந்தியர்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்திருக்கிறேன். இதுபோன்ற சில சம்பவங்களை வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்த இந்தியாவையும் என்னால் வெறுக்க முடியாது. நாங்கள் தற்போது வங்கதேசத்தில் பாதுகாப்பாக இருக்கிறோம் எனப் பதிவிட்டுள்ளார்.