டெல்லி வந்த ஜப்பான் இளம் பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்கள் - அதிரடி காட்டும் மகளிர் ஆணையம்

Delhi Crime
By Thahir Mar 11, 2023 06:50 AM GMT
Report

ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் ஜப்பானிலிருந்து சுற்றுலா நிமித்தம் டெல்லி வந்திருந்த 22 இளம் பெண்ணிடம் அத்துமீறிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஜப்பான் இளம் பெண்ணிடம் அத்துமீறல் 

ஹோலி பண்டிகையின் போது இளம் பெண்ணிடம் வாலிபர்கள் அத்துமீறிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானதை அடுத்து சர்வதேச அளவில் கண்டனத்தை பெற்றுள்ளது.

சுற்றுலாவிற்காக ஜப்பானில் இருந்து இந்தியாவிற்கு வந்த 22 வயது பெண் ஒருவர் டெல்லியின் பஹர்கஞ் பகுதியில் தங்கியிருந்தார்.

அந்த பகுதியில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. அங்கு அந்த 22 வயது இளம் பெண் மீது அப்பகுதியைச் சேர்ந்த 3 ஆண்கள் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

japanese-woman-harassed-on-holi-in-delhi

பலவந்தமாக வண்ணப்பொடிகள் துாவியும், சாயங்களை பீய்ச்சியடித்தும் அந்த பெண்ணிடம் அத்துமீறியவர்கள், தலையில் முட்டையை உடைத்தும் விளையாண்டுள்ளனர்.

அந்தப் பெண் அவர்களிடமிருந்து விடுபடும் நோக்கில், சிரித்து மழுப்பி தப்பியதும் அந்த வீடியோ காட்சியில் இடம் பெற்றிருந்தது.

3 பேர் அதிரடி கைது

இதனை பார்த்த இணையவாசிகள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், டெல்லி மகளிர் ஆணையம் தானாக முன்வந்து இந்த விவகாரத்தை கையிலெடுத்தது.

இது அப்பட்டமான பாலியல் அத்துமீறல்’ என்று கண்டித்ததோடு, ’உடனடியாக வீடியோவில் தென்படும் ஆண்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு’ டெல்லி போலீஸாருக்கு நோட்டீஸ் விடுத்தது.

இதனையடுத்து, 1 சிறுவன் உட்பட 3 இளைஞர்களை டெல்லி போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட ஜப்பானிய பெண் இந்தியாவிலிருந்து வெளியேறி பங்களாதேஷ் நாட்டில் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.