எதிர்பாரா பேரழிவு; மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு - 3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெகா நிலநடுக்கம்
ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டுள்ள ஒரு மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது நடந்தால் அந்நாட்டு பொருளாதாரம் 1.81 டிரில்லியன் டாலர்களை இழக்க நேரிடும். இந்த நிலநடுக்கம் எதிர்பாரா பேரழிவுகளை தரும் சுனாமிகளை தூண்டக்கூடும்.
3 லட்சம் பேர் பலி?
மேலும், இந்த பேரழிவால் சுமார் 3 லட்சம் பேர் பலியாகவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் நங்கய் ட்ரூ பகுதியில் ரிக்டர் அளவு கோலில் 8 முதல் 9 வரை சக்திவாய்ந்த நிலநடுக்கம் வருவதற்கான வாய்ப்புகள் 80 சதவிகிதம் உள்ளது.
இதன் காரணமாக 12 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டாலும், பெரும்பாலான மக்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.