ரமலான் தொழுகை - 700 இஸ்லாமியர்கள் பூமிக்குள் புதைந்து மரணம்
700 இஸ்லாமியர்கள் நிலநடுக்கத்தால் பூமிக்குள் புதைந்து உயிரிழந்துள்ளனர்.
நிலநடுக்கம்
மியான்மரில் இரண்டு முறை ஏற்பட்ட நிலஅதிர்வில், முதல் நிலஅதிர்வு ரிக்டர் அளவில் 7.7 ஆகவும், இரண்டாவது அதிர்வு ரிக்டர் அளவில் 6.4 ஆகவும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்ட போது, ரமலான் கடைசி வெள்ளியில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டிருந்த 700க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துவிட்டதாக மியான்மர் முஸ்லிம் அமைப்பு தெரிவித்துள்ளது.
மாயமான 700 இஸ்லாமியர்கள்
மண்டலே அருகே சுமார் 60 மசூதிகள் சேதமடைந்துள்ளன. தற்போது வரை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 1700 ஆக அதிகரித்துள்ளது. இதில் இந்த 700 இஸ்லாமியர்கள் நிலை பற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், அமெரிக்காவின் புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் (யூஎஸ்ஜிஎஸ்) சார்பில், "மியான்மர் நிலநடுக்கம் மிகவும் மோசமானது. இந்த நிலநடுக்கம் மோசமான சேதத்தை ஏற்படுத்தி இருக்கலாம். பலி எண்ணிக்கை என்பது 10 ஆயிரத்தை கடக்கலாம்" என்று தெரிவித்துள்ளது.