கிராமத்து ஆண்மகனுக்கு மணப்பெண் கிடைக்கவில்லை - இந்த நாட்டிலும் அதே நிலைதானா?
ஜப்பானில் கிராமப்புறங்களில் வசிக்கும் ஆண்களுக்கு மணப்பெண் கிடைப்பதே பெரும் திண்டாட்டமாக உள்ளது.
இந்த நாடு
ஜப்பானில் மக்கள் தொகை வெகுவாக குறைந்து வருகிறது. ஏனெனில் திருமணம் செய்வோரின் எண்ணிக்கையும், குழந்தை பிறப்பு விகிதமும் குறைந்து வருகிறது. கிராமப்புறங்களில் வாய்ப்புகள் இல்லை என்பதை காரணம் காட்டி பலரும் நகரங்களுக்கு வருகின்றனர்.
குறிப்பாக, கிராமப்புற பெண்கள், நகர்ப்புறத்து ஆண்களை திருமணம் செய்யவே விரும்புகின்றனர். கிராமத்தில் இருக்க நினைத்தாலும் ஆண்களுக்கு திருமணத்துக்கு பெண் கிடைக்காத நிலை இருக்கிறது. வேறு வழியின்றி அவர்களும் நகரத்துக்கு வரும் நிலை ஏற்படுகிறது.
இதனால், கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள் பூட்டிக்கிடக்கின்றன. இது குறித்து பரிசீலனை செய்த அரசு, மக்கள் தொகை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் சமநிலையை ஏற்படுத்துவதற்காக புதிய திட்டத்தை அறிவித்தது.
மணப்பெண்
அதன்படி நகரங்களில் இருந்து சென்று கிராமப்புறங்களில் வசிக்கும் ஆண்களை திருமணம் செய்யும் பெண்களுக்கு 6 லட்சம் யென்(ஜப்பான் பண மதிப்பு) நிதியுதவி வழங்கப்படும் என அரசு அறிவித்தது.
மேலும், மாப்பிள்ளை பார்க்கச் செல்லும் செலவைக்கூட அரசே ஏற்கத் தயாராக இருந்தது. எனினும், அரசின் இந்த திட்டத்துக்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கிராமங்களில் வசிக்கும் பெண்கள், சிறந்த வாழ்க்கைக்காக நகரங்களுக்கு வருகின்றனர்.
அவர்கள் திரும்பி கிராமத்துக்கே சென்று கஷ்டப்பட வேண்டும் என அரசு விரும்புகிறது என சமூக வலைதளங்களில் கருத்து வளம் வர தொடங்கியது. எனவே அரசு இந்த திட்டத்தை ரத்து செய்தது.