ஜப்பானில் புதிய சட்டம் - ஆபாச புகைப்படம் எடுத்தால் கடும் தண்டனை!

Sexual harassment Japan
By Vinothini May 05, 2023 07:40 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

 பாலியல் தவறுகளுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்குவது, சட்டங்களை மறுசீரமைப்பது போன்ற நடவடிக்கைகளை ஜப்பான் நாடு மேற்கொண்டுள்ளது.

ஜப்பான்

ஜப்பான் நாட்டில், கடந்த 2019ல் எண்ணற்ற பாலியல் குற்றங்கள் நடந்தன, இதில் குற்றங்களை நிரூபிக்க முடியாததைக் கண்டித்து, அங்கு மிகப் பெரிய அதிருப்தி குரல் உருவானது. மேலும், வளர்ச்சியடைந்த நாடுகளில் திருமணத்துக்கான உரிய வயது இங்கு மிகவும் குறைவாக உள்ளது.

japan-lawmakers-to-ban-sexual-content

ஜி7 நாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கு மிகவும் குறைவாக உள்ளது. அதனால், அந்நாட்டு அரசு பாலியல் வன்முறை, பாலியல் வல்லுறவுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது. மேலும், திருமணத்துக்கான வயதை அதிகரிப்பது, பாலியல் வல்லுறவு பற்றிய வரையறையை மறுசீரமைப்பது, தண்டனையை கடுமையாக்குவது போன்ற பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.

சீர்திருத்தம்

தொடர்ந்து, மற்றவர்களின் முறையான ஒப்புதலின்றி பாலியல் மோகத்துடன் புகைப்படங்கள், வீடியோக்களை எடுக்க தடை விதிக்கும் மசோதாவை ஜப்பான் நாடாளுமன்ற கொண்டு வர திட்டமிட்டுள்ளது. பாலியல் மோகத்தை தூண்டும் புகைப்படங்களால் எண்ணற்ற குழந்தைகளும், பெண் விளையாட்டு வீரர்களும், விமானப் பணி பெண்களும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

japan-lawmakers-to-ban-sexual-content

அதனால், மோகத்தை தூண்டக்கூடிய வகையிலான எந்த ஒரு புகைப்படம், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தடை அந்நாடு செய்கிறது, மார்பிங் செய்வதும் குற்றம் என கூறப்படுகிறது. மேலும், குற்றவாளிகளுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது 3 மில்லியன் ஜப்பானிய யென் (£17,500; $22,000) வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளது. மேலும், வரும் ஜூன் மாதம், இந்த சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.