திடீரென ரத்த சிவப்பில் மாறிய நதி நீர் - பதறிப்போன மக்கள்!
ஜப்பானில் திடீரென நடனத்தின் நீர் சிவப்பு நிறத்தில் மாறியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.
திடீர் மாற்றம்
ஜப்பான் நாட்டிலுள்ள ஒகினாவா மாகாணத்தில் உள்ள நாகோ என்ற நகரத்தின் நதி, திடீரென அடர் கருஞ்சிவப்பு நிறமாக மாறியது. இதனை கண்ட மக்கள் மற்றும் பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இது அங்குள்ள ஒரு மதுபான ஆலையின் உள்ள குளிரூட்டும் அமைப்புகளில் ஒன்றில் ஏற்பட்ட கசிவினால் தொடங்கியதாக கூறப்படுகிறது.
காரணம்
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள பீர் தயாரிப்பு ஆலையில் இது நேற்று முன்தினம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. பின்னர் காலை 09:30 மணியளவில் கசிவு நிறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இதில் சம்பந்தப்பட்ட பீர் தயாரிப்பு ஆலையான ஓரியன் ப்ரூவரிஸ் நிறுவனம் மன்னிப்பு கேட்டு ஒரு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. தொடர்ந்து அதில், உணவுகளில் பயன்படுத்தப்படும் வண்ண சாயம் ஆற்றில் கசிந்ததால் தண்ணீர் நிறம் மாறியதாகவும், இதனால் சுகாதார அபாயங்கள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளது.