மக்கள் அதிருப்தியால் பதவி விலகிய பிரதமர் மகன் - ஜப்பானில் பரபரப்பு!

Prime minister Japan
By Vinothini May 30, 2023 10:56 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

ஜப்பான் நாட்டில் உள்ள பிரதமரின் மகன் மக்களது அதிருப்தியால் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விதி மீறல்

ஜப்பான் நாட்டின் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் மகன் ஷோடாரோ கிஷிடா என்பவர், இவர் பிரதமரின் நிர்வாக கொள்கைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

japan-prime-minister-son-resigned

இதில் பிரதமரின் இருப்பிடத்தை இவரது மகன் தனிப்பட்ட விருந்து நிகழ்ச்சிக்காக பயன்படுத்தி இருக்கிறார்.

இது தொடர்பான புகைப்படங்கள் ஜப்பானின் முக்கிய ஊடகங்களில் வெளியாகின. அதில் அரசு கட்டிடத்தில் பலரும் விதிமுறை மீறி அமர்ந்திருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இதனை கண்டித்து பல செய்திகளும், ஊடகங்களிலும் பலர் இவ்வாறு எப்படி செய்யலாம் என கருத்து கூறி வந்தனர். அந்நாட்டு மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

ராஜினாமா

இந்நிலையில், பிரதமரின் மகன் செய்த தவறுக்கு பொறுப்பேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார்.

japan-prime-minister-son-resigned

இது குறித்து செய்தியாளார்கள் சந்திப்பில் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கூறும்போது, “பிரதமரின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் என்ற முறையில், ஷோடாரோ கிஷிடா நடவடிக்கைகள் பொருத்தமற்றவை.

இதற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும். இதற்காக ராஜினாமா செய்திருக்கிறார்.

அப்பதவியில் தகாயோஷி யமமோட்டோ நியமிக்கப்படுவார்” என்று தெரிவித்தார்.