தனது பதவியினை ராஜினாமா செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : காரணம் என்ன?
அண்ணா பல்கலைகழகத்தின் முக்கிய பதவியில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விலகினார்.
அண்ணா பல்கலைக்கழகம்
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு தலைமையாக செயல்பட்டு வருகிறது அண்ணா பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழக்த்தில் மிக முக்கிய முடிவுகளை ஆலோசிப்பதற்கு சிண்டிகேட் என்ற குழு ஒன்று இருக்கிறது.
இந்த குழுவில் அலுவல் சாரா உறுப்பினராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டு இருந்தார்.
பதவி விலகல்
கடந்த 2021 பொதுத்தேர்தலில் சேப்பாக்கம் திருவெல்லிக்கேணி எம்எல்ஏவாக தேர்வான பின்னர் அதே ஆண்டு செப்டம்பரில் அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழு அலுவல் சாரா உறுப்பினராக அப்போதைய எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினை , சபாநாயகர் அப்பாவு நியமித்தார்.
அதன் பின்னர் கடந்த 2022 டிசம்பரில் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் . அதன் பின்னர் துறை ரீதியிலான வேலைபளு அதிகம் இருப்பதன் காரணமாக அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழு உறுப்பினர் பதவியில் இருந்து நேற்று ராஜினாமா செய்தார்.
அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் சினிமாவில் நடிப்பு மற்றும் தயாரிப்பு என இரண்டில் இருந்தும் முற்றிலுமாக விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.