நாயாக வாழ பிடிக்கல? ரூ.12 லட்சம் செலவு செய்த நபர் - இப்போ என்னாச்சு?
நாய் இனத்தின் உடையில் நாயாக மாறிய நபர் பிரபலமடைந்தார்.
நாயாக மாறனும்..
ஜப்பானைச் சேர்ந்த டோகோ என்ற நபர் நாயாக மாற ஆசைப்பட்டுள்ளார். இதற்காக அவர் சுமார் 2 மில்லியன் யென் (ரூ. 12.18 லட்சம்) செலவு செய்துள்ளார்.
அதற்காக Zeppet என்ற ஒரு தொழில்முறை நிறுவனம் அவருககு காஸ்ட்யூம் தயார் செய்து கொடுத்துள்ளது. இந்த கான்ஸ்ட்யூட் தயார் செய்ய 40 நாட்கள் ஆகியுள்ளது.
12 லட்சம் செலவு
அவர் ஏன் collie என்ற நாய் இனத்தைப் போல் மாறத் தேர்வு செய்தார் என்று கேட்டபோது, அவர் தனது தனிப்பட்ட ரசனை மற்றும் நான்கு கால் விலங்குகள், குறிப்பாக அழகான விலங்குகளின் விருப்பத்தின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்ததாக விளக்கினார்.
டோகோவின் தோற்றம் அவரது ஆன்லைன் பின்தொடர்பவர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றாலும், அமெரிக்க கென்னல் கிளப் நீதிபதிகள் அவரது சித்தரிப்பின் சில அம்சங்களை விமர்சித்துள்ளனர்.
ஆனாலும், தனது வினோத ஆடையால் பல தரப்பிலிருந்து விமர்சனங்களை எதிர்கொண்டாலும், தான் தேர்ந்தெடுத்த முடிவில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.