ஜப்பானில் ரூ.12 லட்சம் செலவு செய்து உடையை வாங்கி நாயாக மாறிய நபர் - வைரலாகும் ஆச்சரிய வீடியோ
மனிதன் நாயாக மாறிவிட்டான் என்று சொன்னால் நம்புவீர்களா? கேட்கவே சங்கடமாக இருக்கிறதா? ஆனால் ஜப்பானை சேர்ந்த ஒருவர் அதிக தொகை செலவழித்து நாயாக மாறும் தனது கனவை நிறைவேற்றி இருக்கிறார்.
தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மைனவி என்ற இந்த ஜப்பானைச் சேர்ந்த மனிதர் நாயாக மாற ஆசைப்பட்டுள்ளார். இதற்காக அவர் சுமார் 2 மில்லியன் யென் (ரூ. 12.18 லட்சம்) செலவு செய்துள்ளார்.
அதற்காக Zeppet என்ற ஒரு தொழில்முறை நிறுவனம் அவருககு காஸ்ட்யூம் தயார் செய்து கொடுத்துள்ளது. இந்த கான்ஸ்ட்யூட் தயார் செய்ய 40 நாட்கள் ஆனதாம்.
இது குறித்து அந்த நிறுவனம் கூறுகையில், ஒரு தனிநபரின் வேண்டுகோளின் பேரில், நாங்கள் ஒரு நாய் மாடலிங் சூட்டை உருவாக்கினோம். ஒரு ‘கோலி’ நாயைப் போல வடிவமைத்தோம்.
இது ஒரு உண்மையான நாயைப் போல நான்கு கால்களில் நடப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிறோம்’ என்று கூறியது. தற்போது அந்த வீடியோ, புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், அந்த நபர் ஒரு நாயின் அனைத்து செயல்பாடுகளையும் செய்து வருகிறார்.
இதோ அந்த வீடியோ -