12 வருடமாக தினமும் 30 நிமிடம் மட்டுமே தூக்கம் - அதிசய மனிதரின் பின்னணி
நாள் ஒன்றுக்கு 30 நிமிடம் மட்டுமே தூங்கும் வினோத மனிதரை பற்றி பார்க்கலாம்.
தூக்கம்
மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 8 மணி நேர தூக்கம் அவசியம் என மருத்துவ ஆய்வுகள் சொல்கிறது.
8 மணி நேரம் தூங்கினாலும் கூட பலருக்கும் கல்லூரிக்கோ அலுவலகத்துக்கோ வந்தவுடன் தூக்கம் சொக்கும் நிலையில், ஒரு நாளுக்கு 30 நிமிடம் மட்டுமே தூங்கி சுறுசுறுப்பாக உள்ள நபர் ஆச்சர்யப்பட வைக்கிறார்.
30 நிமிட தூக்கம்
ஜப்பானில் உள்ள ஹியோகோ மாகாணத்தைச் சேர்ந்த 40 வயதான டைசுக்கே ஹோரி [Daisuke கடந்த 12 வருடங்களாக தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குகிறார்.
நீண்ட நேரத் தூக்கத்தை விட ஆழமான குட்டித் தூக்கம் உங்களின் செயல்திறனை மேம்படுத்த உதவும் என கூறும் ஹோரி, தனது உடலையும் மூளையையும் குறைந்த தூக்கத்துக்குப் பழக்கப்படுத்தி உள்ளதாகவும், அதன்மூலம் தனது செயல்படும் திறன் அதிகரித்துள்ளதாகவும் கூறுகிறார்.
சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு காபி குடிப்பது அல்லது விளையாடுவதன் மூலம் நீங்கள் தூக்க கலக்கத்தை தடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் எச்சரிக்கை
ஜப்பானின் யோமியுரி தொலைக்காட்சி "என்னுடன் செல்வீர்களா?" என்ற ரியாலிட்டி ஷோவில் மூன்று நாட்கள் ஹோரியின் அன்றாட வாழ்க்கையை ஒளிபரப்பியது. இதில் ஒரு நாள், அவர் வெறும் 26 நிமிடங்கள் மட்டுமே தூங்கி மிக சுறுசுறுப்பாக இயக்கியுள்ளார்.
2016 ஆம் ஆண்டில், ஜப்பான் ஷார்ட் ஸ்லீப்பர்ஸ் பயிற்சி சங்கத்தை நிறுவிய ஹோரி, 2100 பேருக்கு தூக்க மேலாண்மை பயிற்சி அளித்து அல்ட்ரா ஷார்ட் ஸ்லீப்பர்களாக மாற்றியுள்ளார். 8 மணி நேர தூக்கத்தை 1 ,மணி நேரமாக குறைத்து ஆரோக்கியத்துடன் இருப்பதாக அவரது மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஹோரியின் நேர மேலாண்மையை பலரும் பாராட்டி வந்தாலும், உடல் மற்றும் மன நலனுக்கு 8 மணி தூக்கம் அவசியம், இந்த செயல்முறை நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.