கணவன்களுக்கு தெரிந்தே மனைவிகளை கர்ப்பமாக்கும் இளைஞர் - சமூக சேவையாம்..

Pregnancy Japan
By Sumathi Aug 19, 2025 07:49 AM GMT
Report

நபர் ஒருவர் விந்தணு தானம் செய்து பல பெண்களை கர்ப்பமாகியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

விந்தணு தானம் 

ஜப்பானில் ஒசாகா நகரைச் சேர்ந்தவர் ஹாகிமே(38). இவர் தனியார் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.

கணவன்களுக்கு தெரிந்தே மனைவிகளை கர்ப்பமாக்கும் இளைஞர் - சமூக சேவையாம்.. | Japan Man Donates Sperm Through Sexual Intercourse

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தபோது, ஹாஜிமேவின் நெருங்கிய நண்பர் ஒருவர், தன்னால் தனது மனைவியை கருத்தரிக்க வைக்க முடியவில்லை என்றும்

அதனால் தனது மனைவியுடன் உறவு கொண்டு அவரை கர்ப்பமாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் முதலில் மறுப்பு தெரிவித்த நிலையில், பின் விந்தணு தானம் அளித்து கர்ப்பமாக்கினார்.

ரோபோட் மூலமாக குழந்தை பெறும் புதிய தொழில்நுட்பம் - 9 மாதத்தில் டெலிவரி!

ரோபோட் மூலமாக குழந்தை பெறும் புதிய தொழில்நுட்பம் - 9 மாதத்தில் டெலிவரி!

இளைஞர் நெகிழ்ச்சி

இதன்மூலம், அவரது நண்பர் மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தொடர்ந்து ஹாஜிமே தன்பால் ஈர்ப்பாளர்கள் மற்றும் திருமணம் செய்துகொள்ளாமல் தனித்து வாழும் பெண்களுக்கும் விந்தணு தானம் அளித்துள்ளார்.

கணவன்களுக்கு தெரிந்தே மனைவிகளை கர்ப்பமாக்கும் இளைஞர் - சமூக சேவையாம்.. | Japan Man Donates Sperm Through Sexual Intercourse

இதுகுறித்து அவர் கூறுகையில், தனக்கு இதுவரை 20 அழைப்புகள் வந்துள்ளது. அதில் 7 பேர் கர்ப்பமடைந்துள்ளனர், 4 குழந்தைகள் பிறந்துள்ளது. இதை தான் பணத்திற்காக மட்டும் தொடர்ந்து செய்யவில்லை.

தன்னுடைய வாடிக்கையாளர்கள் கர்ப்பமடைவதன் மூலம் தனக்கு மகிழ்ச்சியும், மன நிம்மதியும் ஏற்படுவதாலேயே இதை தொடர்ந்து செய்வதாக தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் திருமணமாகாதவர்களுக்கும், தன்பால் ஈர்ப்பாளர்களுக்கும் குழந்தை பெற செயற்கைக் கருத்தரித்தல், செயற்கைக் கருவூட்டல் ஆகிய சிகிச்சைகளுக்கு அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.