மன அழுத்தத்தை குறைக்க 1000 வீடுகளில் நுழைந்த நபர் - அதிர்ந்த போலீஸ்
மன அழுத்தத்தை குறைக்க வாலிபர் 1000 வீடுகளில் அத்துமீறி நுழைந்துள்ளார்.
மன அழுத்தம்
இன்றைய உலகில் மாணவர்கள் முதல் முதியோர்கள் வரை பலரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மன அழுத்தத்தை குறைக்க பலரும் பாடல் கேட்பது, யோகா செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவர்.
ஆனால் ஜப்பானில் ஒரு மனிதர் மன அழுத்தத்தை குறைக்க வினோத செயலில் ஈடுபட்டு கைதாகியுள்ளார்.
1000 வீடுகள்
ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள Dazaifu என்ற நகரில் மற்றவர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாகச் 37 வயதுடைய நபரை காவல்துறை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், "மற்றவர்களின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைவது எனது பொழுது போக்காகும்.
1000க்கும் மேற்பட்ட வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளேன். அப்போது அவர்கள் என்னை கண்டுபிடிப்பார்களா என யோசிக்கும் போது என் உள்ளங்கை வேர்க்கும். அது எனக்கு மகிழ்ச்சியை கொடுப்பதோடு எனது மன அழுத்தத்தையும் குறைக்கிறது" என வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவரின் வாக்குமூலம் காவல்துறையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் மன அழுத்தத்திற்காக இப்படி கூட செய்வார்களா என பலரும் இது குறித்து இணையத்தில் விவாதித்து வருகின்றனர்.