பாலியல் குற்றங்களை தடுக்க நினைக்கும் ஜப்பான் - கொண்டுவந்த புதிய சட்டம்!

Sexual harassment Japan
By Vinothini Jun 17, 2023 07:30 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

 ஜப்பான் நாட்டில் பாலியல் குற்றங்களை குறைப்பதற்காக தற்போது புதிய சீர்திருத்த சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

சட்டசீர்திருத்தம்

ஜப்பானில் 1907-ம் ஆண்டில் இருந்து 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ ஒப்புதல் பெற்றவர்களாக கருதப்பட்டனர். அதனால் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானர்.

japan-lawmakers-extended-sex-age-to-reduce-crime

இது குறித்து பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக ஜப்பான் பாராளுமன்றத்தில் சட்டசீர்திருத்த மசோதா நடைபெற்றது. அதில் பாலியல் குற்ற தடுப்பு சட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களில் பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ ஒப்புதல் வயது 13-ல் இருந்து 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தண்டனை

இதனை தொடர்ந்து, அந்நாட்டில் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் நோக்கங்களுக்காக மிரட்டுதல், உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை அல்லது ரூ.2.86 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

japan-lawmakers-extended-sex-age-to-reduce-crime

இந்த சீர் திருத்தத்துக்கு மனித உரிமை மற்றும் தன்னார்வலர் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

மேலும், இது தொடர்பாக மனித உரிமை குழு ஒன்று கூறும்போது, "பாலியல் உறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயதை உயர்த்துவது குழந்தைகளுக்கு எதிரான பெரியவர்கள் செய்யும் பாலியல் வன்முறையை ஏற்றுக் கொள்ள முடியாதது என்ற செய்தியை சமூகத்திற்கு அனுப்பும். இது ஒரு பெரிய முன்னேற்றம்" என்று தெரிவித்துள்ளது.