அலறவிடும் தாத்தா கேங் ; சினிமாவை மிஞ்சும் சம்பவம் - நடந்தது என்ன?
ஜப்பானில் தாத்தா கேங் காவல் துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சிறைச்சாலை
88 வயதான ஹைடீயோ உமினோ, 70 வயதான ஹிதேமி மஸுதா மற்றும் 69 வயதான கெனிசி வாட்னாபே என்ற 3 முதியவர்களும் சிறைச்சாலையில் இருந்த போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. மூவரும் தண்டனை காலம் முடித்து வெளிய வந்துள்ளனர்.
வெளிய வந்த மூவரும் இணைந்து, ஜப்பானின் வடக்கு தீவான ஹொகைடோவில் பல திருட்டுச் சம்பவங்களை நடத்திவந்துள்ளனர். காவல்துறையினர் இவர்களை “G3S” என்ற பெயரில் அழைக்கின்றனர்.
திருட்டு
பெரும்பாலும் இவர்கள் ஆள் இல்லாத வீடுகளை குறி வைத்து குற்ற செயலில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த மே மாதம், ஹொகைடோவின் தலைநகரான சப்போரோவில் உள்ள ஆளில்லாத வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இந்த தாத்தா குழு திருட்டு வேளையில் ஈடுபட்டுள்ளது.
அங்கு 200 யென் (1.3 அமெரிக்க டாலர்) பணம் மற்றும் மூன்று பாட்டில்கள் விஸ்கி என மொத்தமாக 10,000 யென் (65 அமெரிக்க டாலர்) மதிப்புள்ள பொருளே கிடைத்துள்ளதால் ஏமாற்றமடைந்த இந்த குழு மனம் தளராமல் அடுத்த மாதமும் அதே வீட்டில் திருட முயற்சித்துள்ளது. அப்பொழுது அங்கிருந்த மற்றொரு வீட்டில் இருந்து ஒரு மில்லியன் யென் (6,400 அமெரிக்க டாலர்) மதிப்புள்ள 24 நகைகளை எடுத்துச் சென்றுள்ளனர்.
குற்ற வீதம் அதிகரிப்பு
இந்த வீட்டில் திருடும் போது அங்கிருந்த சிசிடிவி மூலம் சிக்கியுள்ளனர். இவர்கள் இது போல் 10 க்கும் பெறப்பட்ட வீடுகளில் திருடியுள்ளனர். இதில் 88 வயதான ஹைடீயோ உமினோ திருடும் வேலையையும், 70 வயதான ஹிதேமி மஸுதா கார் டிரைவராகவும், 69 வயதான கெனிசி வாட்னாபே திருடிய பொருட்களை கையாள்வதாகவும் தங்கள் வேலைகளை பங்கிட்டு கொண்டுள்ளனர்.
மேலும் இவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகவே திருடியுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஜப்பானில் குற்ற சம்பவத்தில் ஈடுபடும் 65 க்கு வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 1989 2.1 சதவீதம் இருந்ததாகவும், 2019 ல் அது 22 சதவீதமாக அதிகரித்துள்ளதாக ஜப்பான் காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும் இவர்கள் வறுமை மற்றும் தனிமை காரணமாக திருடுவதாக தகவல் வெளியாகியுள்ளது..