வாட்டியெடுக்கும் வெயில்... தப்பிக்கும் வழியை கண்ட மக்கள் - இந்த ஒரு பொருள் மட்டும் போதும்!
வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிப்பதற்காக ஜப்பான் மக்கள் ஒரு வழியை கண்டறிந்துள்ளனர்.
வெப்பம்
ஜப்பான் நாட்டில், தற்பொழுது வெளியின் தாக்கம் அதிகமாக உள்ளது. அந்த நாட்டின் தலைநகரமான டோக்கியோவில் 35 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது. வெயிலின் வெப்பம் தாங்கமுடியாமல் தப்பிக்க வழியே இல்லையா? என்று இருந்த மக்களுக்கு வரப்பிரசாதமாக வந்தது தான் மினி ஃபேன்.
ஜப்பானின் டோக்கியோவில், அணைத்து மக்களும் இந்த மினி ஃபேனை வைத்துக்கொண்டு தான் வெப்பத்திலிருந்து தன்னை காத்துக்கொள்கின்றனர்.
மக்கள் அவதி
இதனை தொடர்ந்து, வெப்பத்தினை தாங்கமுடியாத ஜப்பான் மக்கள் இப்போது எல்லாம் மினி ஃபேனும், தண்ணீர் பாட்டீல் கையுமாகதான் திரிகிறோம் என்று கூறுகின்றனர். பின்னர் வெப்பத்திற்கு பயந்து ஐஸ்கிரீம் கடைகளை நோக்கி செல்கின்றனர்,
மேலும், சென்சோஜி கோவிலில் வைக்கப்பட்டுள்ள ஏர்கூலரில் காற்றுவாங்கி தங்களது வெயிலின் தாக்கத்தை தனித்து கொள்கின்றனர். தொடர்ந்து, வெப்பத்தால் தவிக்கும் மக்கள் பருவ நிலை மாற்றத்திற்கு கவனம் செலுத்துங்கள் என்று உலக நாடுகளை கேட்டு கொள்கின்றனர்.