கொளுத்தும் வெயில் காலம் , வந்தது விடுமுறை : ஐந்து நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை எங்கு தெரியுமா ?

By Irumporai Apr 26, 2022 07:12 AM GMT
Report

கடும் வெயில் காரணமாக ஒடிசாவில் ஐந்து நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான வெப்பம் காரணமாக ஒடிசா அரசு அனைத்து பள்ளி மாணவர்களின் வகுப்புகளையும் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் நிலவும் கடும் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு S&ME துறையின் கீழ் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் அதாவது அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் இன்று முதல் ஏப்ரல் 30 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கொளுத்தும் வெயில் காலம் , வந்தது விடுமுறை : ஐந்து நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை எங்கு தெரியுமா ? | Heavy Sun School Holidays For The First Five Days

இதுதொடர்பாக பள்ளி மற்றும் கல்வி கூடுதல் செயலாளர், பிரதாப் குமார் மிஸ்ரா சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இடைநிலைக் கல்வி வாரியம் (பிஎஸ்இ) மற்றும் உயர்நிலைக் கல்வி கவுன்சில் (சிஎச்எஸ்இ) ஏற்கனவே திட்டமிட்டுள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் சரியான நேரத்தில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.