ஆபாச பொம்மைகளை பொது இடங்களில் வைத்து விளம்பரம்; சிக்கிய நாடு - வலுக்கும் விமர்சனங்கள்!
ஆபாச பொம்மைகளை பயன்படுத்தி விளம்பரம் செய்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஆபாச பொம்மை
ஜப்பான், டொகுஷிமா மாகாணத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமான ஆபாச பொம்மைகளை பயன்படுத்தி விளம்பரம் செய்யப்பட்டது.
விமான நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அந்த பொம்மைகளுக்கு இண்டிகோ சாயம் பூசிப்பட்டுள்ளது. தற்போது அவை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
வலுக்கும் எதிர்ப்பு
அதனைத் தொடர்ந்து, பாரம்பரிய இண்டிகோ சாயமிடுவதை விளம்பரம் செய்வதன் நோக்கமாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. முன்னதாக, 2017ல் விளம்பரத்துக்காக சுமார் 180 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள இரண்டு பொம்மைகளை அதிகாரிகள் வாங்கியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இந்த ஆண்டு விளம்பரத்திற்காக அந்த ஆபாச பொம்மையை வாங்கிய அதிகாரி, அது மக்களின் கவனத்தை ஈர்க்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரன் தான் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.