"எங்கு தேடியும் பொண்ணு கிடைக்கலையா?”- செக்ஸ் பொம்மையை திருமணம் செய்த பாடிபில்டர்
கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த பாடி பில்டர் ஒருவர் செக்ஸ் பொம்மையை திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய ஆசிய நாடான கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த 36 வயதாகும் யூரி டோலோச்கோ என்ற பாடிபில்டர் செக்ஸ் பொம்மையை திருமணம் செய்து கொண்டு உலகம் முழுவதும் பிரபலமானவர்.
இதனிடையே, தனது முதல் செக்ஸ் பொம்மை உடைந்து விட்டதாகவும், தற்போது இரண்டாவதாக வேறு செக்ஸ் பொம்மையை திருமணம் செய்து கொண்டதாகவும, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
அதில் தனது இரண்டாவது மனைவி லூனாவுடன் தேனிலவை அனுபவிக்கும் வாய்ப்பு எனக்கு இதுவரை கிடைக்கவில்லை என்றும், கொரோனா தொற்று அனைவரின் திட்டங்களையும் பெருமளவில் மாற்றி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பணி நிமித்தமாக பல்கேரியா நாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. உடன், லூனாவை அழைத்து வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.ஒருமுறை நாங்கள் காதல் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது சப்ளையர் முதலில் என் மனைவியைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்; பிறகு எங்களைப் பார்த்து அவர் மகிழ்ந்தார் என பாடி பில்டர் யூரி டோலோச்கோ தெரிவித்துள்ளார்.