ரூ.11 கோடிக்கு விற்பனையான சூரை மீன்; அடித்த அதிர்ஷ்டம் - எங்கு தெரியுமா?

Japan Viral Photos Fish
By Sumathi Jan 07, 2025 08:30 AM GMT
Report

ஒரு மீன் 11 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.

ப்ளூஃபின் டியூனா

ஜப்பான், டோக்கியோவிலுள்ள பிரபல மீன் சந்தையில், ப்ளூஃபின் டியூனா எனப்படும் சூரை மீன் ஏலமிடப்பட்டுள்ளது. Toyosu எனப்படும் இந்த மீன் மார்கெட்தான், உலகிலேயே மிகப் பெரிய மீன் சந்தை.

bluefin tuna

அங்கு இந்த வருடம் ஏலத்தில், 276 கிலோ எடை கொண்ட இந்த மீனை, 207 மில்லியன் யென் கொடுத்து , ஜப்பானின் பிரபல உணவகம் ஒன்று, விலைக்கு வாங்கியுள்ளது. (இந்திய மதிப்பில் ரூ.11 கோடியே 14 லட்சம்).

1 நாளைக்கு ரூ.48 கோடி சம்பளம்; சுந்தர் பிச்சையை விட 10 மடங்கு அதிகம் - யார் அந்த இந்திய வம்சாவளி நபர்!

1 நாளைக்கு ரூ.48 கோடி சம்பளம்; சுந்தர் பிச்சையை விட 10 மடங்கு அதிகம் - யார் அந்த இந்திய வம்சாவளி நபர்!

11 கோடிக்கு ஏலம்

இந்நாட்டின் பாரம்பரிய உணவுகளான சுஷி, சஷ்மி போன்ற உணவுகள் உலகம் முழுவதும் விரும்பப்படுவதால் பெரிய உணவகங்களால் பெருமளவில் வாங்கப்படுகிறது. இந்நிறுவனம்தான் கடந்த 5 வருடங்களாகவே ஏலத்தில் அதிக விலை கொடுக்கும் நிறுவனமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இப்போது ஒரே மீன் அதிக விலைக்கு வாங்கி புதிய சாதனையை படைத்துள்ளது. டியூனா மீன்கள் அதிகமாக வேட்டையாடப்பட்டு, பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.

அதனால்தான் இந்த மீன்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மேலும், வருடத்தின் முதல் ஏலத்தில் டூனா மீனை வாங்குவது, மிகவும் ராசியாக பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.