பிரபல விமான நிறுவனம் கொடுத்த ஆஃபர் - அதுவும்.. இந்திய பயணிகளுக்கு இலவசம்!
பிரபல விமான நிறுவனம் ஒன்று இலவச சலுகையை அறிவித்துள்ளது.
இலவச சலுகை
ஜப்பானை சேர்ந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தங்கள் உள்நாட்டு பயணத்திற்கு இலவச பயண சலுகையை அறிவித்துள்ளது.
அதன்படி, இந்தியா, அமெரிக்கா, தாய்லாந்து, சிங்கப்பூர், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, பெய்ஜிங், ஷாங்காய், தைபே உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் ஏர்லைன்ஸில் டிக்கெட் புக்கிங் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முழுக்கட்டணத்தையும் செலுத்த வேண்டும். அதேவேளையில், ஜப்பானுக்குள் 24 மணி நேரம் எங்கு சென்றாலும் உள்ளூர் விமானத்தில் பயணிக்க கட்டணம் கிடையாது.
உள்நாட்டு பயணம்
இந்த சலுகையை பெற ஜப்பான் சர்வதேச விமானத்தில் டிக்கெட் புக்கிங் செய்யும் போதே, உள்நாட்டு பயணத்திற்கான டிக்கெட்டையும் புக் செய்தால் எந்த வித கட்டணமும் இன்றி இலவசமாக புக்கிங் செய்ய முடியும். உதாரணத்திற்கு, ஜப்பானின் டோக்கியாவிற்கு நீங்கள் ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பயணம் செய்தால்,
அங்கிருந்து ஹோக்கிடோ போன்ற இடங்களுக்கு விமானத்தில் கட்டணமின்றி பயணிக்கலாம். சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லாத சுற்றுலா தலங்களையும் பிரபலப்படுத்தும் விதமாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.