மீண்டும்..மீண்டுமா; ஒரே நாளில் கொரோனாவால் 420 பேர் மரணம் - பகீர்!
ஒரே நாளில் கொரோனாவால் 420 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு
சீனா, ஊஹான் நகரில் தொடங்கிய கொரோனா நாடு முழுவதும் பரவி ஒரு ஆட்டம் காட்டியது. அந்த வைரஸ் அண்டை நாடுகளுக்கும் பரவி உலகையே நடுங்க வைத்தது. தொடர்ந்து, கொரோனா தொற்றின் பாதிப்புகள் தொடர்ந்து குறைந்ததால்,

உலக நாடுகளின் பெரும்பாலானவை கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கி, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின. தற்போது, இந்தியா, தென் கொரியா, ஹாங்காங், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,
420 பேர் பலி
அண்டை நாடான ஜப்பானிலும் இத்தொற்று வேகமாகப் பரவி வருகிறது. ஜப்பானில் நேற்று ஒரே நாளில் மட்டும் 420 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 1,92,063 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டோக்கியோவில் மட்டும் 18,732 பேருக்கு இத்தொற்று உறுதியாகியுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.