முன்னாள் முதல்வர் பேரனுடன் மீண்டும் காதலில் ஸ்ரீதேவி மகள்!
தனது முன்னாள் காதலரான ஷிகர் பஹாரியாவுடன் காதலை ஜான்வி புதுப்பித்துள்ளதாக செய்தி பரவி வருகிறது.
ஜான்வி கபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனிகபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
சினிமா வாய்ப்புகளை பிடிப்பதற்காக விதவிதமான ஹாட் உடைகளில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார். இவர் முன்னதாக மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் ஷிகர் பஹாரியாவை காதலித்தார்.
மீண்டும் காதலில்?
அதன்பின் பிரிந்து, நடிகர் கார்த்திக் ஆர்யனை காதலித்தார். அது அப்படியே முடிந்துவிட்டது. அதனையடுத்து நடிகை சாரா அலி கானின் நண்பரை காதலிப்பதாக பேசப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு ஷிகர் பஹாரியாவுடன் ஜான்வி கபூர் வந்தது பேசு பொருளாகியுள்ளது.
இருவரும் சந்தோஷமாக சிரித்தபடியான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் மீண்டும் முன்னாள் காதலருடன் காதலில் விழுந்து விட்டார் போல என பேசத் தொடங்கியுள்ளனர்.
தற்போது, ஜான்வி ராஜ்குமார் ராவுடன் சேர்ந்து மிஸ்டர் அன்ட் மிஸஸ் மாஹி படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்கிறார்.