பிரபல தமிழ் ஹீரோவிடம் வாய்ப்பு கேட்ட ஸ்ரீதேவி மகள் - கசிந்த தகவல்!
ஜான்வி கபூர் தமிழ் ஹீரோவின் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜான்வி கபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனிகபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

சினிமா வாய்ப்புகளை பிடிப்பதற்காக விதவிதமான ஹாட் உடைகளில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார். இந்நிலையில், நேர்க்காணல் ஒன்றில், “விஜய் சேதுபதி சாரை எனக்கு மிகவும் பிடிக்கும்.
பட வாய்ப்பு
நானும் ரவுடி தான் படத்தை 100வது முறையாகப் பார்த்த பிறகு, யாரோ ஒருவர் விஜய் சேதுபதி நம்பரை வைத்திருப்பதை தெரிந்து அதனைப் பெற்று, அவருக்கு போன் செய்தேன். ‘சார் நான் உங்களின் பெரிய ரசிகை, நீங்கள் எப்போதாவது ஏதாவது ஒரு படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று நினைத்தால்,

அதற்கான ஆடிஷனில் நான் கலந்துக் கொள்வேன், நான் உங்களுடன் நடிக்க விரும்புகிறேன்’ என்று கூறினேன். அதற்கு அவர், ‘ஐயோ, ஐயோ’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அவர் மறுத்தாரா அல்லது வெட்கப்பட்டாரா என்று எனக்குத் தெரியவில்லை.
நான் ஆர்வமாக இருந்ததால் அவர் ஆச்சரியப்பட்டார், அவர் அதிர்ச்சியடைந்தார் என்று நினைக்கிறேன்,” எனக் கூறியுள்ளார்.
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
ருஹுனு பல்கலைக்கழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் : மாற்றியமைக்கப்பட்ட கற்றல் செயற்பாடு IBC Tamil
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil