தனுஷை கண்டு தெறித்து ஓடும் நடிகை - என்ன காரணம் தெரியுமா?

Dhanush Boney Kapoor
By Thahir May 28, 2022 12:05 AM GMT
Report

நடிகர் தனுஷின் படத்தில் நடிக்க மாட்டேன் எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் முடியாது என்று நடிகை ஒருவர் தெறித்து ஓடி வருகிறார்.

தனுஷ் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் வாத்தி திரைப்படத்தில் படு பிசியாக நடித்து வருகிறார்.

தனுஷை கண்டு தெறித்து ஓடும் நடிகை - என்ன காரணம் தெரியுமா? | Actress Who Splashes On Dhanush

அண்மையில் வெளியான மாறன் திரைப்படம் தோல்வியடைந்த நிலையில் தற்போது திருச்சிற்றம்பலம் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், தனுஷுடன் நடிக்க மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தமிழ் திரைப்படங்களை அதிக அளவில் தயாரித்து வரும் போனிகபூர் தன்னுடைய மகள் ஜான்வி கபூரை தமிழில் முன்னணி நடிகருக்கு ஜோடியாக களமிறக்கும் திட்டத்தில் இருக்கிறார்.

அந்த சமயத்தில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் அவரிடம் ஜான்வி கபூரை, தனுசுக்கு ஜோடியாக நடிக்க வைக்க கேட்டுள்ளார். அதற்கு போனி கபூர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பே வந்த ஒரு பட வாய்ப்பையும் ஜான்வி கபூர் நிராகரிததாகவும் கூறப்படுகிறது. தனுஷ், சாரா அலிகான் இணைந்து நடித்திருந்த அத்ரங்கி ரே ஹிந்தி திரைப்படத்தில் முதலில் ஜான்வி கபூர் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

அதற்குப் பிறகுதான் படக்குழு தனுசை அணுகி இருக்கிறது. ஆனால் தனுஷ் நடிப்பதை கேள்விப்பட்ட ஜான்வி கபூர் அந்த படத்தில் நடிக்க மறுத்து விலகி இருக்கிறார்.

அதன் பிறகு அந்த கேரக்டரில் சாரா அலி கான் நடித்தார். இந்த செய்தி தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.