நான் காதலில் உண்மையா இல்லை; அதற்கு காரணமே அம்மா-அப்பாதான் - ஜான்வி ஓபன்டாக்!
தனது முதல் காதல் முறிவு குறித்து ஜான்வி கபூர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
ஜான்வி கபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனிகபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

சினிமா வாய்ப்புகளை பிடிப்பதற்காக விதவிதமான ஹாட் உடைகளில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார். இந்நிலையில், இவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில்,
முதல் காதல்
"எனது முதல் காதல் சில நாட்களிலேயே முறிந்து போனது. முதிர்ச்சி இல்லாத வயது காரணமாக இருவருமே ஒரு வித குழப்பத்தில் இருந்தோம். அதனால் இருவருமே எங்களுடைய காதலில் நேர்மையாக இல்லை.

தினம் தினம் பொய் சொல்லியே காதல் உறவை நீடித்துக்கொண்டு இருந்தோம். அந்த நேரத்தில் எனது பெற்றோர் படிப்பின் மீது கவனம் செலுத்தும்படி கடுமையாக எச்சரித்தனர்.
அவர்கள் சொன்னதை கேட்டால் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று புரிந்தது. அதனால் அந்த முதல் காதலை முறித்துக்கொண்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.
யாழில் ஆலயம் செல்ல தனியாரின் காணிக்குள் பாதை அமைக்கும் இராணுவம் : காணி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு IBC Tamil
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan