மகளுக்கு க்ரீன் சிக்னல் - ஜான்வி கபூர் காதலருடன் நெருக்கமாக போனி கபூர்!
மகள் ஜான்வி கபூரின் ஃபாய்ப்ரண்டு ஷிகர் பஹாரியாவுன் விழாவில் போனி கபூர் பங்கேற்றுள்ளார்.
மகளின் காதல்
மறைந்த நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனிகபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

சினிமா வாய்ப்புகளை பிடிப்பதற்காக விதவிதமான ஹாட் உடைகளில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார். இவர் முன்னதாக மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் ஷிகர் பஹாரியாவை காதலித்தார்.
போனி கபூர் சம்மதம்
ஆனால் இருவரும் பிரிந்த நிலையில் மீண்டும் காதலில் இருப்பதாக பேசப்படுகிறது. இந்நிலையில், போனி கபூரின் சகோதரரும், பிரபல நடிகருமான அனில் கபூர் பிறந்த நாள் விழா நேற்று நடந்நதது. இதில் தனது மகளுடன் பங்கேற்ற போனி கபூர் தனது மகளின் காதலலான ஷிகர் பஹாரியா தோல்மீது கைபோட்டு போஸ் கொடுத்துள்ள போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜான்வி தற்போது ராஜ்குமார் ராவுடன் மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்கவுள்ளார்.
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil