தோஷம் காரணமா..? திருப்பதியில் முட்டிபோட்டு படியேறி ஜான்வி..! விளக்கத்தை கேட்டீங்களா
பிரபல நடிகை ஸ்ரீதேவியான மகளான ஜான்வி கபூர் ஹிந்தி மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார்.
ஜான்வி கபூர்
இந்திய சூப்பர்ஸ்டாரான ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் 2018-ஆம் ஆண்டு பாலிவுட் திரையில் அறிமுகமாகினார்.
தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் ஜான்விக்கு இந்திய அளவில் ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். அதற்கு காரணம், பாலிவுட் படங்கள் என்றாலும், சமூகவலைத்தளங்களில் அவர் பதிவிடும் படங்களும் சேரும்.
தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வரும் அவர், தற்போது தெலுங்கில ஆர்.ஆர்.ஆர் நாயகன் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் "தேவாரா" படத்தில் நடித்து வருகின்றார்.
இப்படத்தை தொடர்ந்து விரைவில் துவங்கவுள்ள மற்றொரு ஆர்.ஆர்.ஆர் நாயகன் ராம் சரணின் அடுத்த படத்தில் நடிக்க நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கின்றார்.
முட்டிபோட்டு...
தென்னிந்திய சினிமாவில் கால் பாதிக்க தீவிரம் காட்டி வரும் ஜான்வி, அடிக்கடி திருப்பதி கோவிலுக்கும் சென்று வருகின்றார். இதில் அண்மையில் அவர் படிகளில் முட்டிபோட்டு மலை ஏறி சென்று சாமி கும்பிட்டது பெரும் வைரலானது.
இதற்கு என்ன காரணம் என பலரும் கேள்விகளை எழுப்பி வந்த நிலையில், ஜான்வியே இதற்கு விளக்கமளித்துள்ளார். எனக்கு புனிதமான இந்த திருப்பதி கோவிலுடன் ஆன்மீக தொடர்பு உள்ளது, நான் கிட்டத்தட்ட 50 முறை மலைக் கோவிலுக்குச் சென்றுள்ளேன். பாலாஜி எனது விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக நான் முழங்காலில் படிகளில் ஏறினேன் என ஜான்வி தெரிவித்துள்ளார்.