காதலன் பெயரை உளறிய ஜான்வி கபூர்; அட இவரா? நோட் பண்ண ரசிகர்கள்!
ஜான்வி கபூர் தனது காதலன் பெயரை தெரிவித்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஜான்வி கபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனிகபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருகிறார். தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
சினிமா வாய்ப்புகளை பிடிப்பதற்காக விதவிதமான ஹாட் உடைகளில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார். சமீபத்தில் ஜான்வி கபூர் தனது சகோதரி குஷி கபூருடன் 'காஃபி வித் கரண் 8' என்ற டாக் ஷோவில் பங்கேற்றார்.
காதல்?
அதில், உங்கள் போனின் ஸ்பீட் டயல் பட்டியலில் உள்ள மூன்று பேர் யார்? என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பாப்பா (போனி கபூர்), குஷி, ஷிக்கு என்றார். இதில், ஷி என்றால் ஷிகர் பஹாரி. உடனே தப்பு பண்ணிட்டேன் என்று எக்ஸ்பிரஷன் கொடுத்தார்.
கரன் அதற்கு உரக்க சிரித்த வீடியோ வைரலாகி வருகிறது.
முன்னதாக மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் ஷிகர் பஹாரியா. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இருவரும் மெளனம் காத்து வருவது குறிப்பிடத்தக்கது.