விஜய் பின்னாடி போனீங்கனா நீங்கதான் முட்டாள் - விளாசிய பிரபலம்!
விஜயை பின்பற்றுவோர் ஒரு முட்டாள் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் கூறியுள்ளார்.
விஜய் அரசியல்
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் தவெக தலைவர் விஜய்யை கடுமையாக சாடியுள்ளார். இதோ அவர் கூறியது: விஜயின் உடல் மொழி வெளியே வரும் போது மெதுவாக வருவாரு. ஆனா அது அவர் இல்ல.

51 வயது நடிகர். வெளியே வரும் போது ஒன்னு இருக்கும். வீட்டிற்குள்ளே வேறு ஒன்னு இருக்கும். அவன நீ அரசியல் தலைவனா ஏத்துக்கிட்டு அவன் பின்னாடி போனா உன்னை விட முட்டாள் ஏமாளி யாரும் இருக்க மாட்டான்.
சாடிய ஜேம்ஸ்
எப்போ நீ அவன பின்பற்றணும் என்றால் 5 வருஷம் அவன மனிதனா நடமாட விடு. அவன வெளியே திடலுக்கு வரவிடு. தனிப்பட்டவனா நடமாடட்டும். விஜய் என்ற நடிகனா இல்லாம ஜோசப் விஜய்யா அவனோட உணர்வுகளை நீ புரிஞ்சிக்கோ.

இவன் நல்லவன், நம்ம மேல அக்கறை இருக்கு, தியாகம் செய்றவன், சகிப்புத்தன்மை உள்ளவன், பெரிய திட்டங்கள் தமிழ் நாட்டுக்காக வெச்சு இருக்கான்,
அத நீ எப்போ உணர்கிறாயோ அதுக்கப்புறம் பின்னாடி போய் நில்லு. ஆனா இப்போ நீ ஒரு நடிகன் பின்னாடி ஏமாந்து நிக்குற என்று தெரிவித்துள்ளார்.