தவெக விரும்பினால் ஈபிஎஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவாரு.. ராஜேந்திர பாலாஜி
தவெகவினர் விரும்பினால் அவர்களோடு ஈபிஎஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவார் என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தவெகவுடன் கூட்டணி
நெல்லையில் வஉசிதம்பரனார் 89 ஆவது நினைவு நாளை முன்னிட்டு நெல்லையில் நடைபெற்ற ஒரு அமைப்பின் நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்றார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், பிரதமர் மோடியை டாடி என்கிறீர்களே அவர்கள் துணை முதல்வர் இடத்தை கேட்டால் கொடுப்பீர்களா உங்கள் கருத்து என்ன..? என கேள்வி எழுப்பப்பட்டது.
ராஜேந்திர பாலாஜி தகவல்
அதற்கு அதை எங்களுடைய கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்வார் என்றார். தமிழக வெற்றி கழகத்தோடு கூட்டணி குறித்து ஏதாவது பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறீர்களா?

என்ற கேள்விக்கு தமிழக வெற்றி கழகத்தினர் விரும்பினால் எடப்பாடி பழனிச்சாமி அவர்களோடு கூட்டணி குறித்து பேசுவார் என தெரிவித்துள்ளார்.