விராட் கோலி செய்த காரியம்; எனக்கு அவமானமா இருக்கு - பிரபல வீரர் கருத்து!

Virat Kohli Cricket Indian Cricket Team James Anderson Sports
By Jiyath Mar 02, 2024 10:51 AM GMT
Report

இங்கிலாந்து - இந்தியா இணையேயான டெஸ்ட் தொடரில் விராட் கோலி விளையாடாதது குறித்து இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பேசியுள்ளார்

கோலி விலகல் 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

விராட் கோலி செய்த காரியம்; எனக்கு அவமானமா இருக்கு - பிரபல வீரர் கருத்து! | James Anderson Talks About Virat Kohli

மேலும், இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக இந்த தொடரிலிருந்து இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினார். அவரின் 12 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு முழுமையான தொடரில் இருந்து விலகியது இதுவே முதல் முறையாகும்.

பெரிய ஹீரோவா நீ..? சர்ஃபராஸை எச்சரித்த ரோகித் ஷர்மா - வைரலாகும் Video!

பெரிய ஹீரோவா நீ..? சர்ஃபராஸை எச்சரித்த ரோகித் ஷர்மா - வைரலாகும் Video!

தரமானவர்

இந்நிலையில் இந்த தொடரில் விராட் கோலி விளையாடாதது குறித்து இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பேசியுள்ளார். அவர் கூறியதாவது "விராட் கோலி இந்த தொடரில் விளையாடாமல் சென்றதற்கு இங்கிலாந்து ரசிகர்கள் நன்றி தெரிவிப்பார்கள் என்று கணிக்கிறேன்.

விராட் கோலி செய்த காரியம்; எனக்கு அவமானமா இருக்கு - பிரபல வீரர் கருத்து! | James Anderson Talks About Virat Kohli

ஏனெனில் அவர் அந்தளவுக்கு தரமானவர். ஆனால் எங்களுடைய கண்ணோட்டத்தில் நீங்கள் எப்போதும் சிறந்தவர்களுக்கு எதிராக உங்களுடைய திறமையை சோதிக்க விரும்புவீர்கள்.

அந்த வகையில் பல ஆண்டுகளாக அவருக்கு எதிராக பந்து வீசுவது எனக்கு கடினமாக இருந்தது. அப்படிப்பட்ட அவரை இத்தொடரில் எதிர்கொள்ள முடியாமல் போனது அவமானம்" என்று தெரிவித்துள்ளார்.