70-வது டெஸ்ட் தான் - கோலி சாதனை காலி - ஜடேஜா நிகழ்த்திய அபார சாதனை
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஜடேஜா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார்.
ஜடேஜா அபாரம்
ராஜ்கோட்டில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3-வது போட்டியில் ஜடேஜா பேட்டிங்கில் 112 ரன்களை எடுத்த நிலையில், பந்துவீச்சில் 7 விக்கெட்டை கைப்பற்றினார்.
70 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள ஜடேஜா பேட்டிங்கில் 3005 ரன்களை நான்கு சதம், 20 அரை சதங்களுடன் அடித்துள்ளார்.
அதே நேரத்தில் பந்துவீச்சில் 287 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கும் ஜடேஜா சராசரி 24.14 என்ற அளவில் இருக்கின்றது. இந்த நிலையில், 70 டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி விராட் கோலி, கும்ப்ளே ஆகியோரின் சாதனைகளை ஜடேஜா சமன் செய்து அசத்தியுள்ளார்.
கோலி - காலி
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக முறை ஆட்டநாயகன் விருது வாங்கியவர்கள் பட்டியலில் ஜடேஜா தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் கும்பளே 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பத்து முறை ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார்.
கிங் கோலி 113 டெஸ்ட் போட்டிகளில் 10 முறை ஆட்ட நாயகனாக தேர்வாகியுள்ளார். ஜடேஜா 70 டெஸ்ட் போட்டிகளில் 10 முறை ஆட்டநாயகனை தனதாக்கி மிரட்டியுள்ளார்.
இந்த பட்டியலில் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரான ராகுல் டிராவிட் 163 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 முறை ஆட்டநாயகன் விருதுகளுடன் இரண்டாவது இடத்திலும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் 14 முறை ஆட்டநாயகனாக தேர்வாகியுள்ளார்.