முதல் வேகப்பந்து வீச்சாளர் - இந்திய மண்ணில் இங்கி. வீரர் படைத்த வரலாற்று சாதனை!

Cricket Indian Cricket Team England Cricket Team James Anderson Sports
By Jiyath Mar 09, 2024 07:27 AM GMT
Report

டெஸ்ட் வரலாற்றில் 700 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார். 

இங்கிலாந்து-இந்தியா

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

முதல் வேகப்பந்து வீச்சாளர் - இந்திய மண்ணில் இங்கி. வீரர் படைத்த வரலாற்று சாதனை! | James Anderson Is A Historic Record

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 218 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

விராட் கோலி செய்த காரியம்; எனக்கு அவமானமா இருக்கு - பிரபல வீரர் கருத்து!

விராட் கோலி செய்த காரியம்; எனக்கு அவமானமா இருக்கு - பிரபல வீரர் கருத்து!

வரலாற்று சாதனை

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 477 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் 2 விக்கெட்டுகள் வீழ்த்திய இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 700 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

முதல் வேகப்பந்து வீச்சாளர் - இந்திய மண்ணில் இங்கி. வீரர் படைத்த வரலாற்று சாதனை! | James Anderson Is A Historic Record

இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் 700 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார். மேலும், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்து வீச்சாளர்கள் வரிசையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3-வது இடத்தில் உள்ளார்.