ஐ.பி.எல் போல ஜல்லிக்கட்டு விளையாட்டு...! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்..!
இன்று, மதுரையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
ஜல்லிக்கட்டு போட்டி
பொங்கல் பண்டிகை என்றாலே, ஜல்லிக்கட்டு போட்டியும் சேர்ந்தே மக்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கி விடும். முக்கியமாக, பாலமேடு, அலங்கநல்லூர் போன்ற இடங்களில் நடைபெரும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண பெரும் திரளான மக்கள் கூடுவது வழக்கம் தான்.
இந்த ஆண்டு அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துவங்கி வைத்து கிட்டத்தட்ட 2 மணி நேரம் அமர்ந்து போட்டியை கண்டுக்களித்தார்.
அதனை தொடர்ந்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், 3 ஆண்டுகளாக, தானே இந்த போட்டியை துவங்கி வைப்பதாக குறிப்பிட்டு, இந்த போட்டிக்காக மிக பெரிய போரட்டமே நடைபெற்றுள்ளது என்றும் கூறினார்.
ஐ.பி.எல் போல....
மேலும், தேர்தல் வாக்குறுதியாக கூறப்பட்ட ஜல்லிக்கட்டு மைதானம் 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 5 ஆயிரம் பேர் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி, வரும் 24-ஆம் தேதி அந்த மைதானத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்கவுள்ளார் என்றும் தெரிவித்தார்.
மேலும், அந்த மைதானத்தில் ஆண்டு முழுவதுமே பிரபலமான ஐ.பி.எல் தொடரை போல லீக் போட்டிகள் வைத்து நடத்த திட்டமிருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஜல்லிக்கட்டு விளையாட்டில் வெற்றி பெறும் வீரர்களூக்கு அரசு வேலை வழங்குவது குறித்தும் முடிவேடுக்கபடும் என்று கூறினார்.