ஜல்லிக்கட்டு: பாரம்பரிய விளையாட்டை ஒழிக்கவே பீட்டா மனு -தமிழக அரசு

Tamil nadu Festival Supreme Court of India
By Sumathi Nov 23, 2022 12:29 PM GMT
Report

பாரம்பரிய விளையாட்டு போட்டிகளை ஒழிக்கவே பீட்டா அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு வழக்கு

ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் 102 பக்கங்கள் அடங்கிய பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு: பாரம்பரிய விளையாட்டை ஒழிக்கவே பீட்டா மனு -தமிழக அரசு | Jallikattu Case Tamilnadu Govt In Supreme Court

அதில், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், எந்த தீங்குமின்றி வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு என்பது தமிழ்நாட்டின் பாரம்பரிய கலாச்சார விளையாட்டு. தமிழ்நாடு அரசு தரப்பில் கொண்டு வரப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு சட்டம் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டது என்றும்,

தமிழக அரசு

அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 21ன் கீழ், விலங்குகளுக்கு எந்த ஒரு அடிப்படை உரிமையும் கிடையாது என்றும், ஆனால் விலங்குகளுக்கு அடிப்படை உரிமை உள்ளதாக பழைய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவற்றை ரத்து செய்ய வேண்டும். பாரம்பரிய விளையாட்டுக்களை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே பீட்டா அமைப்பு இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்துள்ளதாகவும் தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டியுள்ளது.