ஒரு பந்தில்...13 ரன்கள்!! அசால்ட்டாக உலக சாதனை படைத்த ஜெய்ஸ்வால்
நேற்று நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி போட்டியில் 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றுள்ளது.
ஜெய்ஸ்வால் சாதனை
இந்த போட்டியில், இந்திய அணியின் இளம் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் முதல் பந்திலேயே 12 ரன்கள் எடுத்தார். முதல் பந்திலேயே சிக்கந்தர் ராசா ஃபுல்-டாசாக no ball வீசினார், அதனை ஜெய்ஸ்வால் சிக்ஸருக்கு அடித்தார்.
அடுத்த free-hit வாய்ப்பிலும் ஜெய்ஸ்வால், சிக்கந்தர் ராசா லென்த் டெலிவரியாக வீச, அதனையும் சிக்ஸருக்கு அடித்தார். ஆகையால் அதிகாரபூர்வமாக ஒரே பந்தில் 13 ரன்களை விளாசி, டி20 கிரிக்கெட்டில் ஒரே பந்தில் 13 ரன்கள் எடுத்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றார்.
தொடரை வென்ற இந்தியா
முதல் டி20 போட்டியை இந்திய அணி தோற்ற நிலையில், அடுத்து நடைபெற்ற 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை 4-1 என கைப்பற்றியுள்ளது. நேற்று இறுதி டி20 போட்டியில், முதலில் விளையாடிய இந்தியா 167/6 எடுத்தது.
சஞ்சு சம்சன் அதிகபட்சமாக 58(45) விளாசினார்.
பின்னர் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியை இந்திய பந்துவீச்சாளர்கள் 125 ரன்களில் கட்டுப்படுத்தியது. இந்திய அணி தரப்பில் முகேஷ் 4/22(4), சிவம் துபே 2/25(3.3) விக்கெட் எடுத்தார்கள்.

viral video: குழாய்க்குள் மறைந்திருந்த பாம்புகளை நுட்பமாக முறையில் பிடித்த நபர்... பகீர் காட்சி! Manithan

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
