தமிழரை ஓரங்கட்டி கண்துடைப்பு நாடகமாடிய பிசிசிஐ!! பயிற்சியாளர் தேர்வில் WV ராமனுக்கு எதிராக சதி
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கம்பீர்
பெறும் பேச்சுகளுக்கு பிறகு, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்ட்டுள்ளார். இவரை தொடர்ந்து அடுத்த பௌலிங், பேட்டிங், பில்டிங் பயிற்சியாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

அதே நேரத்தில், கம்பீர் நியமிக்கப்படுவதற்கு முன்பு அணியின் தலைமை பயிற்சியாளர் நேர்காணலுக்கு WV ராமனும் சென்றுள்ளார். அவர் தமிழகத்தை சேர்ந்தவர்.
ஆடவர் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர். அவருக்கும் கம்பீருக்கும் மத்தியில் தான் போட்டி இருக்கும் என இருந்த நிலையில், துவக்கத்தில் இருந்தே முன்னணி வகித்து வந்தார் கம்பீர்.
கண்துடைப்பு
அவரே தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் தான் நடைபெற்றவை அனைத்தும் கண்துடைப்பு என தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, நேர்காணலுக்கு முன்பாகவே கம்பீர் பிசிசிஐ நிர்வாகிகளுடன் நெருக்கத்தில் இருந்தார் என்றும், அவரே நியமிக்கப்படுவார் என அப்போதே பலருக்கும் தெரிந்த விஷயமாக உள்ளது.

கம்பீர் தான் தேர்வாகப்போகிறார் என்று தெரிந்திருந்த நிலையில், எதற்காக ஒரு நேர்முக தேர்வு நடத்தவேண்டும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.