தங்கம் விக்குற விலைக்கு ஸ்வீட்டு - அதென்ன சுவர்ண பிரசாதம்!
24 காரட் உண்ணக் கூடிய தங்கத்தால் செய்யப்பட்ட இனிப்பு அறிமுகமாகியுள்ளது.
24 காரட்
ஜெய்ப்பூரின் இனிப்புக் கடை ஒன்றில், 'ஸ்வர்ண பிரசாதம்' (Swarn Prasadam) என்று பெயரிடப்பட்டுள்ள விசேஷ இனிப்பு, முழுக்க முழுக்க 24 காரட் உண்ணக்கூடிய தங்கத்தால் நிரப்பப்பட்டுள்ளது.
இதன் விலை, ஒரு கிலோ ரூ.1,11,000. இதன் உட்புறம் முழுவதும் 24 காரட் சுத்தமான, உண்ணக் கூடிய தங்கப் படலத்தால் (Gold Flakes/Leaf) மூடப்பட்டுள்ளது.
ஸ்வீட்டின் விலை
மேலும், குங்குமப்பூ, பாதாம் பருப்பு, பிஸ்தா மற்றும் பல விலை உயர்ந்த உயர் தரமான பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது நாட்டின் மிக விலை உயர்ந்த இனிப்பு என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இங்கு 24 காரட் தங்கத்தால் தயாரிக்கப்பட்ட பிஸ்தா லோஞ்ச் (கிலோ ரூ.7,000), காஜு கட்லி (கிலோ ரூ.3,500) மற்றும் லட்டு (கிலோ ரூ.2,500) போன்ற பிற ஆடம்பர இனிப்புகளும் விற்கப்படுகிறது.
இதை தவிர ஸ்வர்ண பாஸ்மா பாரத் (கிலோ ரூ.85,000), சண்டி பாஸ்மா பாரத் (கிலோ ரூ.58,000) போன்ற தங்க மற்றும் வெள்ளி பாஸ்மா கலந்த பிற விலையுயர்ந்த இனிப்புகளும் விற்கப்படுகின்றன.