எம்எஸ் தோனி தொடர்ந்த வழக்கு; ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

MS Dhoni Cricket Tamil nadu Chennai Madras High Court
By Jiyath Dec 15, 2023 06:51 AM GMT
Report

எம்எஸ் தோனி தொடர்ந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

எம்எஸ் தோனி

கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத் குமார் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

எம்எஸ் தோனி தொடர்ந்த வழக்கு; ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி! | Jail Sentence For Ips Officer In Ms Dhoni Case

அதன்பேரில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி, தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி எம்எஸ் தோனி  2014ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

எம்எஸ் தோனியின் ஜெர்ஸி 'நம்பர் 7' இனி இல்லையா..? பி.சி.சி.ஐ எடுத்த அதிரடி முடிவு!

எம்எஸ் தோனியின் ஜெர்ஸி 'நம்பர் 7' இனி இல்லையா..? பி.சி.சி.ஐ எடுத்த அதிரடி முடிவு!

நீதிமன்றம் உத்தரவு 

இந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளைப் பதிவு செய்து இந்த பதில் மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த பதில் மனுக்களில் உள்ள தகவல்கள் நீதிமன்றத்திற்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக எம்எஸ் தோனி சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

எம்எஸ் தோனி தொடர்ந்த வழக்கு; ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி! | Jail Sentence For Ips Officer In Ms Dhoni Case

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர்மோகன் அமர்வு, ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத் குமார் நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதாகக் கூறி, அவருக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினர். மேலும், மேல் முறையீடு செய்ய ஏதுவாக, தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.