தலித்திற்கு மொட்டையடித்த காங்கிரஸ் வேட்பாளர் - 28 ஆண்டு வழக்கு - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
கடந்த 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற "சிரோமுண்டனம்" வழக்கில் விசாகப்பட்டினம் நீதிமன்றம் ஒரு பரபரப்பு தீர்ப்பை வழங்கியிருக்கின்றது.
28 ஆண்டு வழக்கு
ஆந்திர மாநிலத்தில் ஆளும் YSR காங்கிரஸ் கட்சியை சேர்ந்த MLA வேட்பாளரான தோட்டா திரிமுர்துலு என்பவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடன் சேர்ந்து இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 நபர்களுக்கும் 18 மாத சிறைத்தண்டனையை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளனர்.
தண்டனையுடன் சேர்த்து திரிமூர்த்திலுவுக்கு ரூ. 2.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சுவாரசியம் என்னவென்றால் இந்த வழக்கு 28 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கின்றது.
டிசம்பர் 28, 1996 அன்று, தற்போதைய கோனசீமா மாவட்டத்தில் அமைந்துள்ள ராமச்சந்திரபுரம் மண்டலம், வெங்கடாயபலேம் கிராமத்தில், ஐந்து தலித்துகளை அவமானப்படுத்துவதற்காக தோட்டா திரிமூர்த்தி மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வலுக்கட்டாயமாக அவர்களுக்கு தலையை மொட்டையடித்ததாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் வேட்பாளர்
அப்போது இது மிகவும் பெரும் பரபரப்பான வழக்கு இருந்தது. கடந்த 28 ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து 148 முறை ஒத்திவைக்கப்பட்டது. தலித் அமைப்புகளும் மனித உரிமைகள் மன்றமும் நீதி கேட்டு தொடர்ந்து போராடி வந்தன.
இறுதியில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதற்கிடையில், மண்டபேட்டா தொகுதியின் எம்எல்ஏ வேட்பாளராக திரிமூர்த்திலு அறிவிக்கப்பட்டதால், தேர்தலுக்கு முன்னதாக, ஒய்சிபிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தற்போது, அவர் கைது செய்யப்படுவதால், தொகுதி தொடர்பாக கட்சி என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.