தமிழ் முறைப்படி தான் திருமணம்; தனது நீண்ட நாள் காதலனை மணக்கிறார் ஜான்வி கபூர்!

Janhvi Kapoor Marriage
By Swetha Apr 11, 2024 08:08 AM GMT
Report

பிரபல பாலிவுட் நடிகையான ஜான்வி கபூர் திருமணத்திற்கு தயாராகி வருகிறார் என தெரியவந்துள்ளது.

ஜான்வி கபூர்

பாலிவுட் நடிகையான ஜான்வி கபூர்,ஷிகர் பஹாரி என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் ஆவார்.

தமிழ் முறைப்படி தான் திருமணம்; தனது நீண்ட நாள் காதலனை மணக்கிறார் ஜான்வி கபூர்! | Jahnvi Kapoor Expressed Her Wish To Get Marry

இந்த ஜோடி அவ்வப்போது திருப்பதிக்கு சென்று தரிசனம்ந செய்து வருவது உண்டு.குறிப்பாக புத்தாண்டு, ஜான்வி பிறந்தநாள், புது பட ரிலீஸ் ஆகிய நாட்களில் தவறாமல் தரிசனம் செய்வார்கள்.

இதன் காரணமாக ஊடகங்களில் இவர்கள் இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், ஜான்வியும், ஷிகரும் காதலிப்பதை போனி கபூரும் சமீபத்திய பேட்டிகளில் உறுதி செய்திருந்தார். இந்த நிலையில், ஜான்வியின் திருமணம் எப்போது என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தோஷம் காரணமா..? திருப்பதியில் முட்டிபோட்டு படியேறி ஜான்வி..! விளக்கத்தை கேட்டீங்களா

தோஷம் காரணமா..? திருப்பதியில் முட்டிபோட்டு படியேறி ஜான்வி..! விளக்கத்தை கேட்டீங்களா

தமிழ் திருமணம்

இது குறித்து சமீபத்திய பேட்டியில் ஜான்வி தனது திருமண ஆசைகளை வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், “எனது திருமணம் எப்படி நடக்க வேண்டும், எங்கு நடக்க வேண்டும் என்று தெளிவான கனவு எனக்கு உண்டு. எனக்கும் அம்மாவுக்கும் திருப்பதி ரொம்பவே ஸ்பெஷலான இடம். அதனால், திருப்பதி கோயிலில் தான் எனது திருமணம் நடக்கும்.

தமிழ் முறைப்படி தான் திருமணம்; தனது நீண்ட நாள் காதலனை மணக்கிறார் ஜான்வி கபூர்! | Jahnvi Kapoor Expressed Her Wish To Get Marry

அதிக கூட்டம் இருக்கக் கூடாது. திருமண கொண்டாட்டங்கள் எனக்குப் பிடிக்கும்தான். ஆனால், நான் மணப்பெண் என்பதால் என்னைத்தான் எல்லோரும் கவனிப்பார்கள். அதுபோன்ற விஷயம் எனக்கு பயம். குடும்பம், நண்பர்கள் என எங்களுக்கு நெருங்கியவர்கள் மட்டுமே அங்கு இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

திருமணத்தில் தலைநிறைய மல்லிகைப் பூ வைத்து, தங்க ஜரிகை கொண்ட காஞ்சிபுர புடவை அணிய வேண்டும். என் கணவர் வேஷ்டியில் இருக்க வேண்டும். பிறகு வந்த விருந்தினர்களுக்கு விருந்து வாழை இலையில் வேண்டும்” என்று தமிழ் முறைப்படி திருமணம் நடக்க வேண்டும் என்ற விருப்பத்தை ஜான்வி கூறியுள்ளார்.