ஒரு நாளுக்கு 48 கோடி சம்பளம் - யார் இந்த உலகில் அதிக சம்பளம் பெரும் சிஇஓ?
இந்தியாவை பூர்விமாக கொண்ட சிஇஓ ஒருவர் உலகின் அதிக சம்பளம் பெரும் சிஇஓ ஆக மாறியுள்ளார்.
ஒரு நாளுக்கு ரூ.48 கோடி
நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு அவர்களின் பதவி உயர்வுக்கு ஏற்ப அவர்களின் பொறுப்பும், சம்பளமும் உயரும்.
அதே போல் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட CEO ஒருவர் 2024 ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு ரூ.48 கோடி சம்பளமாக பெற்று உலகிலேயே அதிக சம்பளம் பெற்ற CEO ஆக மாறியுள்ளார்.
ஜெகதீப் சிங்
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஜெகதீப் சிங் கடந்த 2010 ஆம் ஆண்டு QuantumScape என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனமானது வழக்கமான லிதியம்-அயன் பேட்டரிகளை விட அதிகமாக தீவிரமான சக்தி சேமிப்பு மற்றும் வேகமான சார்ஜிங் திறனை கொண்ட புதிய தொழில்நுட்ப பேட்டரிகளை உருவாக்குகின்றது.
இது எலக்ட்ரிக் வாகன உலகில் புரட்சியாக பார்க்கப்படுகிறது. வோக்ஸ்வாகன், பில்கேட்ஸ் போன்ற தொழில் ஜாம்பவான்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்து வந்த ஜெகதீப் சிங் கடந்த 2024 ஆம் ஆண்டு பெற்ற சம்பளம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ரூ.17,500 கோடி
கடந்த 2024 ஆம் ஆண்டில் நிறுவன பங்குகள், போனஸ், ஊதியம் சேர்த்து ரூ.17,500 கோடி பெற்று இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது ஒரு நாளுக்கு ரூ.48 கோடி பெற்றுள்ளார். இதில் நிறுவன பங்குகள் மூலம் மட்டும் 2.3 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.19,000 கோடி) பெற்றுள்ளார்.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள சுந்தர் பிச்சை ஆண்டு சம்பளமாக ரூ.1854 கோடி பெற்றதாக கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு, ரூ.5 கோடி வாங்கியுள்ளார்.