எல்லா சொத்துக்களையும் அழிக்கிறார்கள்...யாருக்கும் பாதுகாப்பில்லை - இரண்டே நாளில் கதறும் ஜெகன்!!
ஆந்திர தேர்தல்
ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்திருக்கிறது.மொத்தமுள்ள 175 சட்டமன்ற இடங்களில் அக்கட்சி 11 இடங்களை மட்டுமே பெற்று எதிர்க்கட்சி இடத்தை கூட இழந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் பல இடங்களிலும் தெலுங்கு தேச கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். ஆந்திர மாநில பல்கலைக்கழகமான NTR University பெயர் YSR University என பெயர்மாற்றப்பட்டிருந்தது.
ஆட்சி கிடைத்ததும், அதனை தற்போது தெலுங்கு தேசம் கட்சியினர் மாற்றியிருக்கிறார்கள். இது தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கதறும் ஜெகன்
அதில், மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சி தாக்குதல்களால் மிகவும் பயங்கரமான சூழல் நிலவுகிறது. ஆட்சி அமைப்பதற்கு முன்பே, தெலுங்கு தேசம் கட்சி கும்பல் களமிறங்குகிறது. கிராமச் செயலகங்கள், ரிசர்வ் வங்கி போன்ற அரசு மற்றும் தனியார் சொத்துக்கள் எங்கும் அழிக்கப்படுகின்றன.
ஒய்.எஸ்.ஆர்.சி.பி.யின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். ஆளுங்கட்சியினரின் அழுத்தங்களால் காவல் துறை மந்தமாகிவிட்டது. கடந்த ஐந்து வருடங்களாக வலுவாக இருந்த அமைதியும் பாதுகாப்பும் முற்றிலும் சீர்குலைந்துள்ளது.
NTR University ???#KutamiTsunami #BabuIsBack pic.twitter.com/zn61MxmgRE
— iTDP Official (@iTDP_Official) June 4, 2024
மாண்புமிகு ஆளுநர் உடனடியாக தலையிட்டு அராஜகத்தை தடுத்து நிறுத்தி மக்களின் உயிர்கள், உடமைகள் மற்றும் அரசு உடைமைகளை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தெலுங்கு தேசம் கட்சி தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஆர்வலர் மற்றும் சமூக ஊடகவியாளர்களுக்கும் நாங்கள் நிற்கிறோம்.