மயங்கி விழுந்த முதலமைச்சரின் சகோதரி - மருத்துவமனை வெளியிட்ட பகீர் அறிக்கை!
உண்ணாவிரதப் போராட்டத்தில் மயங்கி விழுந்த ஆந்திர முதலமைச்சரின் சகோதரி உடல்நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
உண்ணாவிரத போராட்டம்
தெலங்கானாவில் ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி சர்மிளா ரெட்டி, ஒய்எஸ்ஆர் தெலங்கானா என்ற பெயரில் தனியாக கட்சி நடத்தி வருகிறார்.

இவர், அரசு பல்வேறு மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்துவதாகவும், ஊழல் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் பாத யாத்திரை செல்ல உள்ளதாக அறிவித்திருந்தார்.
உடல்நிலை
ஆனால், அதற்கு அனுமதி மறுத்து தெலங்கானா மாநில அரசு அறிவித்தது. இதனை கண்டித்தும், பாத யாத்திரைக்கு அனுமதி அளிக்க கோரியும் கடந்த இரு தினங்களுக்கு முன், ஹைதராபாத்தில் சர்மிளா உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மயங்கி விழுந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் பலவீனம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், நாளை காலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்புள்ளது' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.