தேர்தலில் விழுந்த மரண அடி - எதிர்க்கட்சியில் இணையும் முடிவில் ஜெகன் மோகன்?
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கட்சியை காங்கிரஸ் கட்சியில் இணைக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டி
ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் மகனான ஜெகன் மோகன் ரெட்டி தனி கட்சி துவங்கினார். ஒய்.எஸ்.ஆர்.
காங்கிரஸ் என்ற கட்சியை 2011 ஆம் ஆண்டில் துவங்கினார். காங்கிரஸ் கட்சியில் எம்.பி'யாகவும் இருந்தவர், பின்நாளில் 2014-ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவராக முன்னேறி, 2019'இல் ஆட்சியையும் பிடித்தார்.
175 இடங்களில் 2019ஆம் ஆண்டு தேர்தலில் 151 இடங்களுடன் அதிபெரும்பான்மை பிடித்த ஜெகனின் கட்சி, கடந்த 5 ஆண்டுகளில் கடும் விமர்சனத்தை பெற்றது.
கட்சியை கலைக்கிறார்
அதனை தொடர்ந்தே நடந்து முடிந்த 2024-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வெறும் 11 இடங்களை மட்டுமே பெற்று எதிர்க்கட்சி என்ற தகுதியை கூட இழந்துள்ளது ஜெகன் மோகன் கட்சி.
மக்களிடம் கடுமையான விமர்சனங்களை பெற்றிருக்கும் நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி சற்று துவண்டு போயுள்ளது வெளிப்பட்டு வருகின்றது. ஏற்கனவே கட்சி துவங்கிய போது,அவருடன் இருந்த அவரின் சகோதரியான ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இந்த நிலையில் தான் ஜெகன் மோகன் ரெட்டி விரைவில் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் சேர்க்கவுள்ளார் என்று கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
ஜெகன் மோகன் ரெட்டி கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருடன், ஒய்.எஸ்.ஆர்.சி.,யை, காங்கிரசில் இணைப்பது குறித்து, ஆலோசித்து வருவதாக, ஆந்திர சட்டமன்றத்தின் அனபர்த்தி பாஜக எம்எல்ஏ நல்லமில்லி ராமகிருஷ்ணா ரெட்டி தெரிவித்திருக்கிறார்.