பைபிள் படிக்கும் ஜெகன் மோகன்? திருப்பதிக்கு வந்தால்.. சர்ச்சையை கிளப்பிய சந்திரபாபு நாயுடு!
திருப்பதி தேவஸ்தான பதிவேட்டில் கையெழுத்திட ஜெகன்மோகன் விரும்பவில்லை என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.
ஜெகன்மோகன்
2019 முதல் 2024 வரையிலான ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி தேவஸ்தான லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு அரசியல் செய்கிறார் என்றும், இதனால் திருமலையின் புனிதம் கெட்டுவிட்டது என்று கூறிய ஜெகன்மோகன் ரெட்டி, திருமலைக்கு நேற்று காலை கால்நடையாகச் சென்று சுவாமியைத் தரிசிக்கத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து விஜயவாடாவில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெகன்மோகன் ரெட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்ல தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.
அரசு சதி
தொடர்ந்து பேசிய அவர் ஆந்திராவில் சாத்தான் ஆட்சி நடைபெறுவதாகவும், தனது கோயில் பயணத்தைத் தடுக்க சந்திரபாபு நாயுடு அரசு சதி செய்வதாகக் குற்றம்சாட்டினார். இது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், “ஜெகனை யாரும் திருமலைக்கு வர வேண்டாம் எனக் கூறவில்லை.
தேவஸ்தானத்தில் உள்ள நிபந்தனைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் 4 சுவருக்குள் பைபிள் படிக்கிறேன் எனஜெகன் மோகனே ஒப்புக்கொண்டுள்ளார். திருமலைக்கு வந்தால் தேவஸ்தான பதிவேட்டில் கையெழுத்திட நேரிடும் என்பதால் அவர் திருமலைக்கு வரவில்லை” என்று
சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.