யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் தமிழக மீனவர்களின் பிரேத பரிசோதனை தொடங்கியது

srilanka army fisherman
By Jon Jan 22, 2021 07:31 PM GMT
Report

இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேரின் பிரேத பரிசோதனை யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் தொடங்கியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கடந்த 18-ம் தேதி தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆரோக்கிய ஜேசுவின் விசைப்படகில் மெசியா, நாகராஜ், செந்தில்குமார், சாம்சன்டார்வின் ஆகிய 4 மீனவர்களும் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

மறுநாள் அதிகாலை மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர், மீனவர்களை விரட்டிய போது, நால்வரும் கடலில் மாயமாகினர்.

இதனை தொடர்ந்து நால்வரின் உடலையும் இலங்கை கடற்படை மீட்டது, இந்நிலையில் தற்போது அவர்களின் பிரேத பரிசோதனை தொடங்கியுள்ளது.

பரிசோதனை முடிந்த பின்னர் நால்வரின் உடல்களும் இரவு 8 மணிக்கு ஒப்படைக்கப்படும், இதனை தொடர்ந்து நாளை காலை இந்திய கடலோர காவல்படையிடம் மீனவர்களின் உடல்கள் ஒப்படைக்கப்படலாம்.